பாரதமாதா எங்கே போகிறாள்

இந்தியா எங்கே சென்றுகொண்டிருக்கிறது? பாரதமாதா எங்கே போகிறாள் என்ற தலைப்பை வைத்ததன் காரணம் இயர்க்கை வளம் இல்லாமல் ஒரு நாடு முனேறமுடியாதா? இயற்க்கை வளம் இருந்தும் முன்னேறாத நாடுகள் எத்தனை, இயர்க்கைவளம் இல்லாமல் முனேறும் நாடுகள் எத்தனை என்று ஒருமுறை பட்டியல் இட்டு பாருங்கள். இந்தியாவில் என்னென்ன இயற்க்கை வளம் இருக்கிறது எந்த வளம் இல்லை எது அவசியமாக தேவைப்படும் வளங்கள் எவை எல்லாம் தேவை இல்லாத வளங்கள். இந்தியாவில் எத்தனை விஞ்ஞானிகள் இருந்தார்கள் மற்றும் இருக்கிறார்கள், அவர்கள் என்ன கண்டு பிடித்தார்கள் என்ன சாதனைகள் செய்தார்கள். இந்தியாவில் எத்தனை அறிஞர்கள் இருந்தார்கள் என்ன சாதனை செய்தார்கள். எத்தனை பேர் அதன் பயனை அனுபவித்தார்கள் எத்தனை பேர் அதனை பின்பற்று கிறார்கள். எத்தனை மகான்கள் சாமியார்கள் கடவுள்கள் இருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்தார்கள் அதனால் மக்கள் என்ன பயனடைந்தார்கள். ஏன் இன்னும் இந்தியாவில் இத்தனை முனேற்றதடை ஏன் பட்டினி ஏன் வறுமை ஏன் கொலை கொள்ளை திருட்டு தீவிரவாதம் அனைத்தும் தலைவிரித்து ஆடுகிறது. வலியவன் வாழ்கிறான் இலைத்தவன் ஏமாற்றப்படுகிறான் மனம் இலைத்தவன் மயக்கப்படுகிறான் உடல் இலைத்தவன் உறிஞ்சப்படுகிறான். வாய்ப்பும் வசதியும் சிபாரிசும் வாய்த்தவன் வளர்ந்துகொண்டே இருக்கிறான் மற்றும் வளர்க்கப்படுகிறான்.

இன்று இந்தியா தான் சுதந்திரம் பெற்றிருக்கிறதே ஒழிய இன்னும் இந்தியர்கள் சுதந்திரம் பெறவில்லை ஆனால் சில இந்தியர்கள் மட்டும் சு தந்திரம் பெற்றிருக்கிறார்கள். பாரத மாதாவிற்க்கு ஜே என்று சொல்கிறாய் பாரதமாதா உனக்கு என்ன செய்தாள் நீ அவளுக்கு என்ன செய்தாய் சற்று யோசித்து பாருங்கள். "ஒரு வேலை ஜே தான் பாரதமாதாவோ" பாரதமாதா ஏன் இத்தனை இடர்பாடுகளை சந்திக்கிறாள் ஏன் அவளால் முன்னேர முடிய வில்லை அவளுக்கு ஏழறை நாட்டு சனி பிடித்துள்ளதா இல்லை தோஷம் பற்றிக்கொண்டதா. இல்லை பாரதமாதாவின் கனவன் அவளை அடிமையாக்கி கொடுமை படுத்துகிறான. முன்பு ஒருவன் அவளை சிறை வைத்திருந்தான் விடுதலை ஆனபின் இப்போது ஒருவனை மனந்திருக்கிறாள். அவளது அனேகபிள்ளைகள் மூடர்களாக பாக்குதின்பவர்களாக பல பிள்ளைகள் குடிகாரர்களாக புகைப்பவர்களாக சில பிள்ளைகள் சூதாட்டக்காரனக ஏமாற்றுகாரனாக சோம்பேரியாக திருடனாக கொலைகாரனாக தீவிரவாதியாக தெருப்பொருக்கியாக இருக்கிறார்கள் பாரதமாதா கட்டுப்பாடு இழந்தவளா அவளது பிள்ளைகள் கட்டுக்கு அடங்காதவர்களா. நூலைப்போல் சேலை தாயைப்போல் பிள்ளை என்பார்கள் ஒருவேலை அப்படியா?. ஒரு சில பிள்ளைகள் மட்டும் மற்றபிள்ளைகளையும் அவளையும் ஏய்த்து வானலாவி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் ஏன் இதனை அவளால் கேட்க்கமுடியாதா அவளுக்கு வாய் இல்லையா ஊமையா, கண்ணில்லையா குருடா?. இல்லை ஒருவேலை தன் பிள்ளைகள்மேல் பாரபட்ச்சம் பார்க்கிறாளா? இல்லை அவளது பிள்ளைகள் பெட்ரோலுக்காகவும் ஆயுதத்திற்க்காகவும் அனு எரிபொருலுக்காகவும் அவளை அடகுவைத்துவிட்டார்களா? பாரதமாதா என்ன நிறம்(வர்னம்) அவள் பிள்ளைகள் மட்டும் ஏன் பல வர்னங்களாக உள்ளார்கள்?

முடிந்தால் தெரிந்தவற்றுக்கெல்லாம் பதில் தாருங்கள் போஸ்ட் கமண்ட் ஆக ஏனெனில் எனக்கு எதுவும் தெறியாது நான் பாரதமாதாவின் அறியா பிள்ளை நேற்றுதான் பிறந்தேன். இப்போதுதான் நான் பேசவே(எழுத) வாய்திறந்திருக்கிறேன் என்ன என்ன இருக்கிறது என்று எனக்கே தெரியவில்லை நான் இப்போது சாப்பிடமட்டும்தான்(படிக்க) கற்றிருக்கிறேன் இன்றுதான் முதல்முதலாக சிலர்கேட்க்கும்படி பேசுகிறேன். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் எப்படி பேசவேண்டும் என்றும் 'சுட்டி'க்காட்டுங்கள் நான் நிறைய கற்க்க ஆசைப்படுகிறேன் நான் விரிக்கப்பட்டுள்ள வலையில் ஒவ்வொரு மீனாக பார்த்து வருகிறேன் எந்தமீன் ருசியானது எது ருசியே இல்லாதது எது ஆபத்தனது எது கசப்பானது என்று. இன்றுவரை பசிக்காக சில மீனை புசிக்கிறேன் ருசி எங்கு என்றுதான் தெறியவில்லை. இது இந்த உலகைப்பார்த்து பிறந்தகுழந்தையின் அழுகுறல்

0 comments:

[Valid Atom 1.0]